Thursday 12 February 2015

காதலில் காதலியின் முகத்தைக் காண்பதில் காதலனுக்கு அலாதி பிரியம் வரும்.அதுவும் அவளின் விழிகளைக்கண்டுவிட்டால் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.
                           "இன்பத்தில் மிதப்பான்
                             இன்னல்களை மிதிப்பான்".
ஏனென்றால் விழிகளுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. கண்களை பார்த்து பேசினால்  உண்மையை பேசமுடியும் என்பது மறுக்கமுடியாத உண்மையே. இது நான் கண்ட உண்மையும்கூட ...


ஒருசிலவற்றை தன்  காதலியோடு ஒப்பிட்டுக்கொள்ளும் காதலன்.அவளைக் கண்டபின்பே அனைத்தும்  அவனின் பார்வைக்கு புதிதாய் தெரிவதாக நினைக்கிறான் .

பெண்ணின் மனதில் முழுவதும் தஞ்சம்கொண்டப்பின் அவளை உணர்ந்து மெய்மறந்து அவள் மூலமாக  அனைத்து சுகங்களையும் அடைகிறான் காதலன் .

இன்னும் எத்தனைக் காலங்கள் பிறந்தாலும் கணையத்தின் வேலையை இணையம் செய்ய முற்பட்டாலும் காதலில் காதல்  கடிதம் எழுதிக்கொள்ளாத காதலர்களே இருக்க முடியாது. தன் காதலிக்கு முதல் காதல் கடிதத்தைக்கொடுத்து திருமணத்திற்கும் விண்ணப்பம் வைக்கும் என் முதல் காதல் கடிதம்...

இங்கே பல பூக்கள் தன் குணங்களை ,பாவனைகளை தன் காதலியைக் கண்டதும் மாற்றிக்கொள்வதாகவும் அவனின் உயிரைப் பூவோடு ஒப்பிட்டும் அவளை இங்கே பூக்களால் அலங்கரிக்கிறான் ...

காதலனின் ஒவ்வொரு அசைவிலும் காதலி நடமாடுகிறாள். தன் உதிரத்தோடு காதலிக் கலந்துவிட்டதை நினைத்து மகிழ்ந்துக்கொள்கிறான் ...
அவளில்லாத பொழுதுகளில் காதலன் மிகவும் வருந்துகிறான் , அவள் பேசமறுக்கும்  வார்த்தைகள் அவனை மிகவும் காயப்படுத்துகிறது ...

முழுவதுமாக புரிந்துக்கொண்டபின்பு காதலில் முத்தம் கொள்வதில் தவறொன்றுமில்லை.இதை கலாச்சார சீர்கேடு என்று  மாறுதலாக சிந்திக்க வேண்டாம் .முதல் சந்திப்பில் இதயங்களை மாற்றிக்கொள்கிறார்கள் ,அந்த நேரத்திலே காதலனின் வேண்டுகோளுக்கு உடன்பட்டு முத்தத்திற்கு காதலி சம்மதிக்கிறாள்...


No comments:

Post a Comment