Thursday 19 February 2015

பொழுது என்றாலே நேரம் உள்ளடங்கியதாகத்தான் இருக்கும் காதலியுடன் கூடி காலங்கள் நகர்ந்ததை , அவளில்லாத நேரத்திலும் அவளைத் துற்றாது போற்றுதலே ஒரு சிறந்த காதலனுக்கு நன்று ...
காதல் பிரிவில் ஓவ்வொரு ஆணும்,  பெண்ணும் மிகுந்த துயரத்திற்கு உள்ளாவது இயற்கைதான். சுவாசிப்பதுகூட மறந்துபோகும் , இதயம் வலியில் துடித்துபோகும் . இந்த தருணத்தில் மதுவை வலிநீக்கி என்று அருந்தும் மனிதர்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள் ...

அனைத்திலும் ஆனந்தத்தை காணும் காதலன் காதலில் மட்டும் எவ்வளவு அவலத்தை சந்திக்கிறான் என்று
பாருங்கள் ...

காதல் எவ்வளவு சுவாரசியமான ஒன்றோ அதைப்போலவே, காதல் மிகுந்த வலிகொடுக்கும் ஆயுதமும்கூட.  காதல் ஒரு முடிவில்லா சோகமென்று இந்த வரிகளைப் படித்தால் உங்களுக்கே தெரியும் ...


சமுதாயத்தில் ஆணுக்கு  பெண் நிகரென்று எத்தனை முழக்கங்கள் வந்தாலும் , தீயமனம் படைத்த ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் . தான் காதலிக்கும் பெண் ஒருவனுக்கு மனைவியாகிறாள் , அவன் அவளை மதிப்பதில்லை, ஒரு பெண்ணாகக்கூட நினைப்பதில்லை , தினமும் கொடுமையை அனுபவிக்கிறாள் ...

 தன் காதலியை வேறொருவன் திருமணம் செய்துகொண்டால்  அதனை எந்த ஒருவனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது . திருமணத்திற்குப்பின் அவளின் கணவன் இறந்துவிட்டால் காதலனின் மனம் என்னவாகும் ? இந்த ஒரு நிலையில் காதலியின் வாழ்வு சிறக்க அவளுக்கு மறுமணம் நடந்திடவே அவனின் மனம் ஏங்குகிறது . இதற்கும் ஒரு நல்ல மனம் வேண்டும் ...


No comments:

Post a Comment