Sunday, 1 March 2015


"நெருஞ்சில் நினைவுகள்" புத்தக வெளியீட்டு விழாவிலிருந்து சில காட்சிப்பதிவுகள்...

Wednesday, 25 February 2015

வாலிபம் வந்ததும் காதல் வருவது வழக்கமான ஒன்று. மனிதனுக்கு சாதி இருக்கலாம் , மதம் இருக்கலாம் . ஆனால் மனதிற்கு எந்த சாதி , மத , பேதங்கள் இல்லை. காதல் தோன்றுவதற்கு எவரும் ஒரு காரணத்தைச் சொல்ல முடியாது . சாதி, மதத்தைப் பார்த்து வரும் காதல்  இல்லை . காதல் என்ற போர்வைக்குள் காமத்தைத் தேடும் ஒரு சிலரை வைத்துக்கொண்டு உண்மைக் காதலுக்கு மறுப்புத் தெரிவிப்பது எந்த விதத்திலும் நியாமம் இல்லை . சாதி மாறி காதல் கொள்வதால் அவர்களின் நிறம் ஒன்றும் மாறிப்போவதில்லை. இனியாவது உண்மைக் காதலைப் பிரிப்பதற்கு எந்த வெற்றுக் காரணத்தையும் தேடாதீர்கள் ...


நமக்கு ஏற்படும்  நிகழ்வுகளில் மகிழ்வதுபோல் , துயரங்களில் வருந்துவது ஒன்றும் புதிதில்லை . ஆனாலும் துயரம் ஏற்படும் வேளைகளில் மனதினை திடப்படுத்திக்கொண்டால் நம் சிந்தனை கொஞ்சம்  சீராவது உண்மைதான் . ஒரு சிலர் தவறுதலாக சிந்தித்து தற்கொலை முயற்சிகளை எடுப்பதன் விளைவு அவனின் குடும்பமே வருந்தும் அளவிற்குமாறிவிடுகிறது . எதற்கும் தற்கொலை ஒரு தீர்வாகாது .  பலவீனமான மனம் படைத்தவர்களே இதை ஒரு தீர்வாக நினைத்து முடிவெடுக்கின்றனர் . தற்கொலை சிந்தனை வருகின்ற அந்த ஒரு நிமிடத்தை கடந்துவிட்டால் நாம் உயிர்பிழைப்பதும் , தெளிவாவதும் உறுதி ...


பல பள்ளிக்கூடங்கள் , பல கல்லூரிகள் இருப்பதுபோலவே பல பட்டதாரிகள் ஆண்டுதோறும் வந்த வண்ணமே இருக்கின்றார்கள் . அப்படி வருபவர்களில் நூரில் ஐம்பது சதவீத பட்டதாரிகளுக்குக்குக்கூட வேலை கிடைப்பதில்லை . வேலையை மட்டுமே நோக்கிய , வாழ்வு நிறைவு பெறாத பட்டதாரிகளின் நிலை இனி வரும் காலங்களில் என்னவாகும்?

எதற்கும் ஒரு அளவு உண்டு. அதைப்போலவே எதற்கும் ஒரு எல்லை உண்டு . நம் இலக்கை ஒரு எல்லையை வைத்து  பயணிக்கும்போது வெற்றிக்கனி நம்  கையில் கிட்டுவது மறுக்க முடியாத உண்மை ...

                                           "தீயதைக் கேட்காதே
                                             தீயதைப் பேசாதே
                                             தீயதைச் செய்யாதே "
நாம் ஒரு நல்ல பழக்கவழக்கத்தை மேற்கொள்வது , கடைபிடிப்பது மிகவும் கடினம் . ஆனால் ஒரு தீயப்பழக்கத்தை கடைபிடிப்பது மிகவும் சுலபம் . தீயப்பழக்கங்களான புகைப்பிடித்தல் , மது அருந்துதல் , விலைமாதருடன் உறவுகொள்ளுதல் இந்த மூன்று பழக்கங்களை உடைய ஒருவனுக்கு இறப்பு வெகுதூரம் இல்லை . இவை எல்லாமே தனக்குத் தாமே வைத்துக்கொள்ளும் சுயக்கொள்ளி
அல்லவா ?Sunday, 22 February 2015

பொருளாதாரத்தின் அடிப்படையில் ஏழை , பணக்காரன் , நடுத்தரம் என்று வகைப்படுத்தப்படுகிறது . அன்றாடம் வயிற்றுப்பசிக்காக யாசகம் கேட்டு அதில் பசியாறும் மனிதர்களை எந்த வகையில் நாம் சேர்ப்பது . ஊழலை எதிர்க்கவும் , குறைக்கவும் அரசாங்கம் எந்த அளவிற்கு முயற்சி எடுக்கிறதோ அதில் ஒரு சிறுபங்கு யாசகம் கேட்பவர்களுக்கு எடுத்து அவர்களின் நிலைமையை மாற்றினால் சமுதாயம் வளரும்...

பெண்ணுக்கு திருமண வயது 21 ஆனால் 30 வயதினைக் கடந்தும் திருமணமாகாத பெண்ணின் மனம் என்ன பாடுபடும்? அவளின் எதிர்காலம் என்னவாகும்? அவளின் அழகும், இளமையும் செய்த பாவமென்ன ?

ஒரு குழந்தை பிறக்க முதன்மைக் காரணம் ஆணும் , பெண்ணும் சேர்ந்ததன் விளைவாக அல்லது பலனாக கரு உருவாதலே ஆகும். ஒரு பெண் குழந்தையை சுமக்க வாய்ப்பில்லை என்றால் அதற்கு அவள் மட்டுமே காரணம் என்பது முட்டாள்தனமான ஒன்றாகும். ஆணுக்கும் குறை இருக்கலாம் , கருவறையில் கோளாறு இருக்கலாம் . இந்த இயற்கை நிகழ்விற்காக அவளை விழாக்களில் புறக்கணிப்பது எந்த அடிப்படையில் நியாமாக கருதப்படுகிறது என்று புலப்படவில்லை . இங்கே குழந்தைப்பேறு அடையாமல் ஒருத்தி படும் அவலத்தைப் பாருங்கள் ...

கண்விழித்து காணும்போது அந்த நிகழ்வு உண்மையாக இருந்திருக்க கூடாதா என்றுத் தோன்றும் . அப்படி பல நல்ல கனவுகளும் , கெட்டக் கனவுகளும் நம் உறக்கத்தில் காண்பது இயல்புதான். கனவுக்கென்று எந்த ஒரு அறிவியல் சார்ந்த நிரூபணமும் இல்லை இதுவரையில். நம் நினைவுகளின் மாறுபட்ட வெளிப்பாடே கனவாகத் தோன்றுகிறது . இங்கேயும் ஒருவன் கனவுக் காண்கிறான் வானத்தில் ...

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். ஒரு செயல் தொடங்குவது முதலே இனிதே நடந்துவந்தால் அந்த செயல் எந்த ஒரு தொய்வுமின்றி நன்றாக நடந்து முடியும். ஒன்றன்பின் ஒன்றாக அனைத்தும் நமக்கு கிடைத்துவிட்டால் அதைவிட பேரின்பம் , நிம்மதி வேறு என்னவாக இருக்கும்?

மனிதனை நோக்கிவரும் அனைத்து தடைகளையும் உடைத்து , வெற்றிப் பாதையினை கண்டறிந்து அதன்வழியேப் பயணித்தால் வாழ்வு சிறந்து விளங்குவது உறுதி ...


Friday, 20 February 2015

நல்லது நடந்தால் மனங்குளிர்வதும் , கெட்டது நடந்தால் மனங்காய்வதும் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள இயல்புதான். "தன் நோய்க்கு தானே மருந்து என்பதுபோல" தம்மைத் தேற்றிக்கொள்ள வேறு எவரும் வரமாட்டார்கள் . நமக்கு நாமே கேள்விக் கேட்டுக்கொள்வதும் , விடையளிப்பதும் மட்டுமே நிலைக்கும். அதன் மூலமாகவே நம்மைத் தேற்றிக்கொள்ள முடியும் ...

எந்த ஒரு தொடக்கத்திலும் , எந்த ஒரு நிகழ்விலும் தடைகளும் , தோல்விகளும் தொடர்ச்சியாக அரங்கேறினால் மனம் எவ்வளவு உளைச்சலுக்கு உள்ளாகும் ? அந்நேரத்தில் சிந்திக்கக்கூட முடியாமல் குழப்பங்களே மிஞ்சும் ஒரு நிலை . அப்போதுதான் மற்றொருவனை சார்ந்து அவனிடம் குழப்பங்களை சொல்லி அதை தீர்க்க முடியுமா என்று ஆராய்ந்துப் பார்க்கும்  தருணமது ...

நம் சமுதாயத்தில் கணவன் இறந்துவிட்டால் மனைவி விதவையாகிறாள் ஆனால் மனைவி இறந்துவிட்டால் கணவன் மாப்பிள்ளையாகிறான் . இது ஒரு ஆணாதிக்க உச்சத்தின் வெளிப்பாடு அல்லவா ? அவள் விதவைக்கோலம் பூண்டதற்கு அவளா பொறுப்பு ? அவளுக்கு மறுமணம் செய்வதில் மட்டும் ஏன் இந்த சமுதாயம் தயக்கம்
காட்டுகிறது  ?

காதல் என்ற புதுஉலகில் காதலியோடு மனந்திறந்து உலாவருகிறான் காதலன் . அனைத்தும் அவள் மூலமாக அடைவதாக எண்ணுகிறான் , அவளை  உயிரினும் மேலாக  நினைக்கிறான் அவளும் அவ்வாறேத் தொடர்கிறாள் . சுகமாய் நகர்ந்துகொண்டிருந்த காதலில் ஒரு பெருந்துயர் . காதலியின் மரணம் ... இந்த நேரத்தில் காதலனின் துயரத்தைச்சொல்ல வார்த்தைகளே இல்லை . இதயம் திறந்து அழுகிறான் , கண்களில் கண்ணீர் வற்றிப்போனது , இனி காலங்கள் எப்படி நகரும் என்ற சிந்தனையோடு
                     "மணமாலைக்கு காத்திருந்த அவன்
                       மரணமாலையை சாத்துகிறான் அவளுக்கு "
இது கற்பனையின் உச்சமாக இருந்தாலும் இதுபோன்ற துயர சம்பவம் உலகில் எங்கேனும் நடந்தவண்ணம்தான் இருக்கிறது...