Friday 20 February 2015

நல்லது நடந்தால் மனங்குளிர்வதும் , கெட்டது நடந்தால் மனங்காய்வதும் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள இயல்புதான். "தன் நோய்க்கு தானே மருந்து என்பதுபோல" தம்மைத் தேற்றிக்கொள்ள வேறு எவரும் வரமாட்டார்கள் . நமக்கு நாமே கேள்விக் கேட்டுக்கொள்வதும் , விடையளிப்பதும் மட்டுமே நிலைக்கும். அதன் மூலமாகவே நம்மைத் தேற்றிக்கொள்ள முடியும் ...

எந்த ஒரு தொடக்கத்திலும் , எந்த ஒரு நிகழ்விலும் தடைகளும் , தோல்விகளும் தொடர்ச்சியாக அரங்கேறினால் மனம் எவ்வளவு உளைச்சலுக்கு உள்ளாகும் ? அந்நேரத்தில் சிந்திக்கக்கூட முடியாமல் குழப்பங்களே மிஞ்சும் ஒரு நிலை . அப்போதுதான் மற்றொருவனை சார்ந்து அவனிடம் குழப்பங்களை சொல்லி அதை தீர்க்க முடியுமா என்று ஆராய்ந்துப் பார்க்கும்  தருணமது ...

நம் சமுதாயத்தில் கணவன் இறந்துவிட்டால் மனைவி விதவையாகிறாள் ஆனால் மனைவி இறந்துவிட்டால் கணவன் மாப்பிள்ளையாகிறான் . இது ஒரு ஆணாதிக்க உச்சத்தின் வெளிப்பாடு அல்லவா ? அவள் விதவைக்கோலம் பூண்டதற்கு அவளா பொறுப்பு ? அவளுக்கு மறுமணம் செய்வதில் மட்டும் ஏன் இந்த சமுதாயம் தயக்கம்
காட்டுகிறது  ?

காதல் என்ற புதுஉலகில் காதலியோடு மனந்திறந்து உலாவருகிறான் காதலன் . அனைத்தும் அவள் மூலமாக அடைவதாக எண்ணுகிறான் , அவளை  உயிரினும் மேலாக  நினைக்கிறான் அவளும் அவ்வாறேத் தொடர்கிறாள் . சுகமாய் நகர்ந்துகொண்டிருந்த காதலில் ஒரு பெருந்துயர் . காதலியின் மரணம் ... இந்த நேரத்தில் காதலனின் துயரத்தைச்சொல்ல வார்த்தைகளே இல்லை . இதயம் திறந்து அழுகிறான் , கண்களில் கண்ணீர் வற்றிப்போனது , இனி காலங்கள் எப்படி நகரும் என்ற சிந்தனையோடு
                     "மணமாலைக்கு காத்திருந்த அவன்
                       மரணமாலையை சாத்துகிறான் அவளுக்கு "
இது கற்பனையின் உச்சமாக இருந்தாலும் இதுபோன்ற துயர சம்பவம் உலகில் எங்கேனும் நடந்தவண்ணம்தான் இருக்கிறது...



No comments:

Post a Comment