Wednesday 18 February 2015

இதுவரை நமக்கு காதல் தோல்வி பற்றிய எத்தனையோ அறிவுரைகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது. இங்கு காதலை வாகனத்தோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறேன் அதற்கு எந்த ஒரு பெரிய காரணமும் இல்லை.வாகனம் ஓட்டுவது ஒரு திறமை அத்தோடு விபத்துகளின்றி வாகனத்தை ஓட்டுவது மிக மிக சாமர்த்தியமான ஒன்றுதான். அதுபோல காதல் செய்வதென்பது எளிது, காதல் தோல்விபெறாது வாழ்வதென்பது சற்று கடினம்தான். வாகன விபத்தில் மரணம் எப்படி ஏற்படுகின்றதோ காதலிலும் அவ்வப்போது சில மரணங்களும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது...

  ஒவ்வொரு துயரத்திலும் மனிதன் எவ்வளவு காயப்படுகிறானோ அதைப்போலவே துயரம் ஏற்படும்போது அதை பெரிதுப்படுத்தாமல் எதிர்கொள்ளும் வலிமை படைத்தவன் நிச்சயமாக வாழ்வில் முதன்மையாகவும் , சிறப்புடனும் விளங்குவான் என்பது உலகறிந்த உண்மை. தன் தோல்விகளை எல்லாம் நேர்மறைகளாக்கி பயணம் செய்யும் இந்த வரிகள் நமக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்...

 சோகத்தை வெளியேக் காட்டிடாமல் , எவரையும் துயரப்படுத்தாமல் தன் சிந்தைகள் முழுவதையும் வெற்றியை நோக்கியதாக மாற்றிக்கொள்வது சற்று கடினம்தான் ஆனால் இதை கடைபிடித்துவிட்டால் வானமும் நம் கையில் கிடைப்பது சுலபம்தான்...

No comments:

Post a Comment