Thursday 12 February 2015

சங்ககால காதலர்களெல்லாம் சந்தித்துக்கொள்வதே மிக மிக அரிதான ஒன்றாகும். அப்படியே சந்தித்துக்கொண்டாலும் குறுக்கே ஒரு சுவர் அமைந்திருக்கும்.உரையாடல்கள் மட்டுமே அங்கு நடந்தவண்ணம் இருக்கும் .நெருக்கமான சந்திப்பு என்பதே இல்லாமல் இருந்த காலமது .ஆனால் தற்போது காதலனும் காதலியும் சந்தித்துக்கொள்வது இயல்பாகிவிட்டது.உணர்வுமிகுதியின் காரணமாக இருவரும் சங்கமித்துக்கொள்வதும் அவ்வப்போது அரங்கேறுகிறது.காதலியை மஞ்சத்தில்மட்டும் புதுமையாய் காணும் காட்சியே இது...

   அவளைக்கண்டு பல நிகழ்வுகள் அதன் இயல்புகளை நேர்மறையாக மாற்றிக்கொள்வதாக எண்ணும் காதலன் இராஜேஸ்வரி அம்மனும் தன் காதலியை வழிபட எண்ணுவாள் என்று கற்பனைக் காண்கிறான் ...
 எந்த  ஒரு கதையிலும் கட்டாயமாக ஒரு தொடக்கமிருக்கும், ஒரு கதைக்களமிருக்கும் ,ஒரு கிளர்ச்சியிருக்கும் , அதுபோலவே ஒரு நல்ல முடிவிருக்கும். ஒரு கதைக்கே இவ்வளவு அம்சங்கள் இருக்கும்போது காதலிக்கு எவ்வளவு இயற்கை பேரம்சங்களிருக்கும் .எந்த ஒன்றையும் தன் காதலி இயல்பாகவே செய்வதானாலும் அதில் ஒரு சிறப்பு இருப்பதாகவே காதலன் உணர்வதும் பிதற்றுவதும் வழக்கமான் ஒன்றுதான்.அவளை இரசிக்க வேண்டுமென்றால் சொல்லவா வேண்டும்.காதலியின் அழகில் வியந்து மெய்மறந்து அவளின் உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை வர்ணிப்பதில் தன்னையே அவன் மறந்துவிட்டதைப் பாருங்கள்  ...

  பெண்ணை மலராக பாவித்து காதலன் அவளின் அழகு,குணம் ,நிறம் ,வார்த்தைகளில் புத்துணர்ச்சியைக் காண்கிறான், அவளைவிட்டு பிரியும் சிறு பொழுதும்கூட தன்  நெஞ்சத்தில் நெருஞ்சில் நினைவுகளாய் பதிவதையும் ,குத்துவதையும் பாருங்கள். இது எனக்குத் தோன்றிய கற்பனையில் ஓன்று  ...

காதல் பரிமாற்றங்களில் மிக மிக முக்கியமானவை பரிசுப்பொருட்கள். காதலன் கொடுத்தவற்றை காதலியும் ,காதலி கொடுத்தவற்றை காதலனும் கிட்டத்தட்ட நினைவுள்ளவரை அல்லது உயிருள்ளவரை நினைவுப்பொருட்களாக வைத்து பாதுகாத்து வருவது இன்று வரை உள்ள வழக்கம். அதிலும் இதில் ஆண்களே அதிகமாக பாதுகாத்து இரசித்து வருகிறார்கள். உதாரணமாக அவளின் கூந்தல் முடி, நகங்கள், கைக்குட்டை என்று சொல்லிக்கொண்டே போகலாம். இங்கேயும் அப்படித்தான் காதலி கொடுத்தவற்றை எங்கெல்லாம் வைத்திருகிறானென்று பாருங்கள் ...

காதல் என்பது ஒரு முறைதான் வரும் அதுபோலவே காதலியும் வாழ்வில் ஒருத்திதான் . பல நிகழ்வுகளில், குணங்களில் அவளின் உருவம் நமக்கு தோன்றுவதாக நினைப்பது ஆண்களுக்கொன்றும் புதிதில்லை. அவள் ஒருத்தியாக இருந்துகொண்டு நிறைய பரிமாணங்களாக நம்முடன் கலந்திருப்பது ஒவ்வொரு காதலனுக்கும் கிடைத்த வரப்பிரசாதம்...

காதல் கொள்கின்ற அனைவரும் எதிர்பார்ப்பது ஒன்றாக சேர்வது எப்போது என்பதாகத்தான்  இருக்க முடியும் . அதற்கு ஏற்ப முயற்சிகளும் அரங்கேறிகொண்டேதான் இருக்கும், உறவுகள் மூலமாகவோ அல்லது நண்பர்கள் மூலமாகவோ . இங்கு சற்று மாறுதலாக காலத்திடம் சேர்த்துவைக்க வேண்டுகோள் வைக்கிறான் காதலன்...

காதலர்கள் அனைவரும் சேர்ந்துவிடுவதில்லை, சேராத காதலும் மரித்துப்போவதுமில்லை . காதலிக்கும்பொழுது கோயில், கடற்கரை, பூங்கா இதுபோன்ற சில இடங்களுக்கு செல்வது வழக்கம். தன்னைவிட்டுப் பிரிந்துச்சென்ற காதலியிடம் தாம் சென்று உளமாற அனுபவித்த இடங்களையெல்லாம் ஞாபகப்படுத்தி அசைபோடும் காதலன் எவ்வளவு மனவருந்துதலுக்கு உள்ளாகியிருப்பான் ...

அசாதாரணமாக அனுபவிக்கும் ஒவ்வொரு இன்பமும், துன்பமும், அனைத்து நிகழ்வுகளும் தானாகவே நடப்பதாக காதலி உணர்கிறாள். ஆனால் அந்த ஒவ்வொரு செயலுக்கும் காரணம் நான்தானென்று காதலன் உணர்கிறான், உணர்த்துகிறான்...
அதீத காதல் நிரம்பி வழியும்போது எதுவும் தவறில்லை என்று காதலன் தன காதலியிடம் கேட்டு கூடலுக்கு சம்மதம் வாங்குவதில் ஆண்கள் மிகவும் சாமர்த்தியவாதிகள்.கட்டளைகளைகூட பெண்கள் விரும்பமாட்டார்கள் ஆனால் அன்புக்கட்டளைகளையும் , கெஞ்சல்களையும்  உடனே சம்மதித்துவிடுவார்கள், நம்பிவிடுவார்கள். உணர்ச்சிக் கட்டுப்பாட்டின் வலிதனை சுட்டிக்காட்டி தன்வயப்படுத்தும் காதலனின் பிதற்றல்களே இங்கே சித்ரவதையாய் வருகிறது...

ஒவ்வொரு காதல் பிரிவிற்கும் ஒரு காரணமிருக்கும். அந்த காரணம்  எதுவாக இருந்தாலும் அது நம் இதயத்தை மிகவும் காயப்படுத்தும், வாழ்வை சஞ்சலப்படுத்தும். காரணமே சொல்லாமல் காதலி தன்னைவிட்டுப் பிரிந்துவிட்டால்
அந்த வலி எப்படியிருக்கும்?
நம் உயிரைக் கொன்றுவிடாதா?



No comments:

Post a Comment